புதுப்பெண்ணை கொன்று  நாடகமாடிய கணவன் குடும்பத்தினர்..நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


வரதட்சணை கொடுமை செய்து புதுப்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடிய கணவன் மற்றும் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். 

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஸ்வப்னா என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த நரேந்திர சவுகான் என்பவருக்கும் கடந்த மாதம் 2ம் தேதி திருமணம் நடைபெற்றது.
அப்போது  நரேந்திர சவுகானின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் பணமும், தங்க நகைகளும் வரதட்சணையாக திருமணத்தின்போது ஸ்வப்னாவின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து திருமணத்திற்குப்பின் புதுப்பெண் ஸ்வப்னா தனது கணவர் நரேந்திர சவுகானுடன் கோட்வா கிராமத்தில் வாழ்ந்துவந்துள்ளார் .அப்போது புல்லெட் பைக், கூடுதலாக 3 லட்ச ரூபாய் வரதட்சணையாக தரவேண்டுமென ஸ்வப்னாவிடம் நரேந்திர சவுகானும் அவரது சகோதரி தேவி, அண்ணிகள் பூஜா தேவி, ரீனா தேவி என குடும்பத்தினர் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்வப்னாவுக்கு தொடர்ந்து வரதட்சணை தொல்லை கொடுத்த நரேந்திர சவுகான் மற்றும் குடும்பத்தினர் நேற்று ஸ்வப்னாவின் கழுத்தை நெரித்து குடும்பத்தினர் கொலை செய்தனர். பின்னர், கொலையை தற்கொலையாக திசைதிருப்ப நினைத்து ஸ்வப்னாவின் உடலை வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் கட்டி தொங்கவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

மேலும், ஸ்வப்னா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கிராமத்தினரிடம் நாடகமாடிய பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஸ்வப்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் ஸ்வப்னாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, ஸ்வப்னாவை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய நரேந்திர சவுகானின் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். சவுகான் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What happened to the family of the husband who acted in a play after killing his wife?


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->