சென்னை பறக்கும் ரயில் நிறுவனம், சென்னை மெட்ரோவுடன் இணைப்பு: இதனால் ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் விவரங்கள் என்ன..? மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி..! - Seithipunal
Seithipunal


சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்துவது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. இன்று (ஜூலை 30) மக்களவையில் எழுப்பியுள்ளார்.

சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) எனப்படும் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை இந்திய ரயில்வேயிடமிருந்து, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு மாற்றுவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா..? என்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டமின் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்- க்கு முழுமையாக மாற்றுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன..? என்றும் வினாவியுள்ளார்.

மேலும், இந்த மாற்றத்தை சுமுகமாக செயல்படுத்துவதற்காக நிதி, செயல்பாடு மற்றும் சட்ட ரீதியான விவகாரங்களை அரசு பரிசீலித்து வருகிறது என்றால் அதன் விவரங்கள் குறித்தும்,சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் நெட்வொர்க்கை,  சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் -க்கு(CMRL) முழுமையாக மாற்றுவதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்றும் கனிமொழி எம்.பி. மேலும் எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What are the details of the Chennai Flying Train Companys connection with Chennai Metro Kanimozhi MP asked in the Lok Sabha


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->