பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம், மோடி அரசு தப்ப விடாது; அமித்ஷா எச்சரிக்கை ..!
We will not stop operations until all terrorists are eliminated Amit Shah warns
கடந்த மாதம் 22 -ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக பொது வெளியில் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் அங்கு கூறுகையில், பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு துணையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயங்கரவாதிகள் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள் என்றும், பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம். அனைத்து பயங்கரவாதிகளையும் எச்சரிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது என்றும், பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
We will not stop operations until all terrorists are eliminated Amit Shah warns