ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடகி திருமதி.டி.கே.பட்டம்மாள் அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


ஆடுவோமே பள்ளு பாடுவோமே" முதலான தேசிய கீதங்களை பாடிய இசைப் பாடகி "தேசிய குயில்" திருமதி.டி.கே.பட்டம்மாள் அவர்கள் நினைவு தினம்!.

 டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் (மார்ச் 19, 1919 - ஜூலை 16, 2009) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார்.இவர் கான சரஸ்வதி என்றும்  இசைப் பேரரசி என்றும்  சங்கீத சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறார்.

 இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்.  மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.

 அலமேலு என்ற இயற்பெயருடைய “பட்டா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி. அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார்.


சுதந்திர போராட்ட வீராங்கனை திருமதி.அருணா ஆசஃப் அலி அவர்கள் பிறந்ததினம்!.

 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali) 1909ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஹரியானா மாநிலம் கால்கா நகரில் (அப்போது பஞ்சாப் மாநிலம்) பிறந்தார்.

 இவர் சிறு வயதில் இருந்தே சுதந்திர வேட்கையும், துணிவும் கொண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

 1958-ல் டெல்லியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். மாநகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அமைதிக்கான லெனின் பரிசும், 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

 நாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அருணா ஆசஃப் அலி 87வது வயதில் 1996 ஜூலை 29 ஆம் தேதி அன்று மறைந்தார். அவருக்கு 1998-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We will dance and sing in memory of the vocalist Mrs D K Pattammal


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->