பதான் படம் பார்க்க அண்ணனை தோளில் சுமந்து சென்ற தம்பி - வலைதங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ருஷ்டம். இவர் ஒரு மாற்று திறனாளி. இவருடைய சகோதரர் சாஜத். இந்த நிலையில், நடிகர் ஷாருக் கானின் தீவிர ரசிகரான ருஷ்டம், பதான் படம் பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். 

அதிலும் எப்படியாவது முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விடும் வேண்டும் என்று ஒரு குறிக்கோளில் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு பாகல்பூரில் ஒரு டிக்கெட் கூட கிடைக்கவில்லை. 

இதையடுத்து ருஷ்டம், தனது சகோதரரின் உதவியை நாடியுள்ளார். சகோதரரின் ஆதரவுடன் மேற்கு வங்காளத்தில் உள்ள மால்டா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது சகோதரனுடன் சம்சி நகரில் உள்ள பவன் திரையரங்கில் பதான் படம் பார்க்க சென்றுள்ளார். 

அப்போது, சாஜத் செல்லும் இடமெல்லாம், தனது சகோதரரை தோளில் சுமந்தபடியே சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

watch pathan movie man carried brother on shoulder to go


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal