வாக்காளர் உரிமை யாத்திரை: ராகுல் காந்தி தலைமையில் பீஹாரில் இன்று தொடக்கம்..!
Voter rights march led by Rahul Gandhi begins in Bihar today
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று பீஹாரில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் யாத்திரையை துவங்குகிறார்.தொங்குகிறார்.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி பீஹாரில் ஆட்சி நடத்துகிறது. எதிர்வரும் அக்டோபரில் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றன. அதனபடி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பீஹாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில், ராகுல் இன்று யாத்திரையை தொடங்கி வைக்கிறார். இதில் பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
குறித்த யாத்திரை பீஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம் பகுதியில் இன்று தொடங்கி, அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. பின்னர் செப்டம்பர் 01 இல், தலைநகர் பாட்னாவில் முடிவடையவுள்ளது.
English Summary
Voter rights march led by Rahul Gandhi begins in Bihar today