#BREAKING : "வீட்டிலிருந்தே ஓட்டுப்போடலாம்" கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புதிய நடைமுறை.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டப்பேரவை தேர்தலானது இந்தியாவே எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வாக இருக்கின்றது  வரும் மே மாதம் 24 ஆம் தேதியுடன் தற்போதைய கர்நாடக அரசின் பதவிக்காலம் முடிவடைகின்றது. எனவே, ஏப்ரல் மாத இறுதியில் கர்நாடக மாநிலத்திற்கான தேர்தல் நடத்தப்பட இருக்கின்றது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அறிவிப்பே வெளியாகாத நிலையிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர். கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 

ஆகவே, அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 எம்எல்ஏக்கள் அவசியம். இன்று 11.30 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறி இருந்த நிலையில், தற்போது இது குறித்த பல்வேறு விவரங்களை வெளியிட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்கும் நடைமுறையை கர்நாடக அரசு முதல் முறையாக நடைமுறைப்படுத்த இருக்கிறது என்ற அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vote From Home In karnataka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->