மனைவி செய்த துரோகம் - சீரியல் கில்லராக மாறிய கணவன் கைது.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் மனைவி ஏமாற்றிய விரக்தியில், அடுத்தடுத்து 3 கொலைகள் என்று தொடர் கொலையில் (சீரியல் கில்லராக) ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் அனகபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பாபு என்பவர்தான் இந்த தொடர் கொலையில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. 

ராம்பாபுவிடம் போலீசார் நடத்திய விசாரணையின்படி, அவரின் மனைவி வேறொரு நபருடன் தொடர்புவைத்துக்கொண்டு அவரை ஏமாற்றி உள்ளார். மேலும் அவரின் முதலாளியும் அவரை ஏமாற்றி உள்ளார். 

இதனால், மனநிலை பாதிக்கப்பட்ட (மனபிறழ்வு) ராம்பாபு, தொடர்ந்து பெண்களை கொலை செய்துவந்துள்ளார்.

அவரின் மனநிலை தற்போதுவரை சரியாக இல்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஒரு பெண், ஒரு தம்பதியை ராம்பாபு கொலை செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

visakapattinam serial killer arrest


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal