வந்தே பாரத் ரெயில் உணவில் புழு! அதிர்ச்சியில் பயணிகள்!
Vande Bharat Train food
ஆந்திராவின் திருப்பதியில் இருந்து தெலங்கானாவின் செகுந்தராபாத் வரை தினமும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் குறைந்த நேரத்தில் இலக்கை அடையக்கூடியதையால், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த ரெயிலில் பயணிக்க டிக்கெட் கட்டணத்துடன் உணவுக்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று திருப்பதியில் இருந்து செகுந்தராபாத் நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரெயிலில் உணவுக்குள் பூச்சிகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயணியொருவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்ததைக் கண்ட மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரெயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எழுத்து மூலமாக புகார் செய்தனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம், அதிக கட்டணம் வசூலிக்கும் ரெயில்வே நிர்வாகம் தரமான உணவுப் பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதில்லை என பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.