இறந்த காதலியை திருமணம் செய்த இளைஞர்! அதிர்ச்சி பின்னணி!
uttarpradesh love suicide marriage
உத்தரபிரதேசம் மகராஜ்கஞ்சில் செல்போன் மற்றும் ஆபரணக் கடை நடத்தும் சன்னி, வீட்டுக்கான தேடலின் போது பிரியங்கா (23) என்ற பெண்ணை சந்தித்தார். முதல்நோட்டத்தில் தொடங்கிய பரிச்சயம், காதலாக வளர்ந்தது. மூன்றாண்டுகள் காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் நவம்பர் 29-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் சன்னியை பலத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருமணத்தை கனவாக மட்டும் இல்லாமல் எதார்த்தமாக்க விரும்பிய சன்னி, பிரியங்காவின் குடும்பத்தினரிடம் அவரது உடலுடன் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்.
அவர்களும் இதற்குச் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் பூசாரியை அழைத்து திருமண மந்திரங்கள் ஓதப்பட்டன. சன்னி, பிரியங்காவின் நெற்றியில் குங்குமம் வைத்தார்; மாலை exchange செய்தார். பின்னர், சவப்பெட்டியை ஏழு முறை வலம் வந்தார்.
“அவள் இல்லாதாலும் என் மனதில் என்றும் என் மனைவியே,” என்று கூறி, பிரியங்காவின் பிணத்தின் அருகில் அமர்ந்து கண்ணீர் சிந்திய சன்னியின் செயல் அனைவரையும் உருகவைத்துள்ளது.
English Summary
uttarpradesh love suicide marriage