கணவனை சுட்டுக்கொலை செய்து, மனைவி தற்கொலை.. அனாதையாக 2 மகள்கள்.!
Uttar Pradesh Wife Murdered Husband and wife Suicide Police Investigation 9 Feb 2021
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் மாவட்டத்தை சார்ந்தவர் குஷ்மா தேதி (வயது 43). இவரது கணவர் பூரான் சிங் யாதவ் (வயது 45). இவர்கள் இருவரும் பல்வாடி பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு எழுந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குஷ்மா தேவி, வீட்டில் இருந்த துப்பாக்கியை அடுத்து கணவரின் தலையில் சுட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர், ஆத்திரத்தில் தவறு செய்துள்ளோம் என்பதை உணர்ந்து, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். மகள்கள் இருவரும் வெளியே செல்கையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தம்பதிகள் இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தம்பதிகளின் பிள்ளைகள் தாய், தந்தையை இழந்து தவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh Wife Murdered Husband and wife Suicide Police Investigation 9 Feb 2021