தமிழகத்தில் பொங்கல் பரிசு பரபரப்பு: 2 கோடி 22 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள், வேட்டி-சேலை, ரொக்கப் பணம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு 2 கோடி 22 லட்சத்து 72 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 கோடி 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 கிலோ பச்சரிசி மற்றும் அதே அளவு சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டு, கரும்பு, முந்திரி, திராட்சை போன்ற பொருட்களும் சேர்த்து வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் ஏற்பாடும் செய்யப்பட்டு, 1 கோடி 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள் மற்றும் 1 கோடி 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகள் நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 85% வேட்டி-சேலைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.மேலும், பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது, இந்த பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் எவ்வளவு வழங்கப்படும் என்பதுதான். கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், தேர்தலுக்கு முந்தைய பொங்கலில் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், திமுக ஆட்சியில் அதற்கும் அதிகமாக ரூ.3,000 அல்லது ரூ.4,000 வழங்கப்படும் என மக்கள் நம்புகின்றனர்.இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பை நெரிசல் இல்லாமல் விநியோகிக்க, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

வீடு, வீடாக டோக்கன் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கன்களுக்கு தினசரி பரிசு தொகுப்பு வழங்கப்படும். டோக்கன்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

அரசிடமிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் தொடர்பான தகவல் மக்கள் மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal gift distribution creates buzz Tamil Nadu 2point22 crore ration cardholders receive dhotis sarees and cash


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->