பேசிக்கொண்டு இருக்கும்போதே செல்போன் வெடித்து சிதறிய அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில் போன் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்ததில் இளைஞரின் விரலில் காய் காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரேத மாநிலம், அம்ரோஹா மாவட்டத்திற்கு உடைபட்ட ஹிஜாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு என்பவற்றின் செல்போன் வெடித்து தான் இந்த சமத்துவம் அரங்கேறியுள்ளது.

சம்பவம் குறித்து ஹிமான்ஷு தெரிவிக்கையில், "நான் என் உறவினரிடம் செல்போனில் பேசி கொண்டு இருந்தேன். அப்போது திடீரென செல்போன் வெடித்து தீப்பிடித்தது. 

இதில் எனது விரலில் கடுமையான காயம் ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் மொபைலை வாங்கினேன். அந்த மொபைலுக்கான ரசீதும் என்னிடம் உள்ளது" என்று தெரிவிக்கிறார்.

செல்போன் வெடிக்கும் சம்பவம் இது முதல் முறையல்ல. கடந்த 2019 டிசம்பர் மாதம், மத்தியப் பிரதேசத்தின் சத்னா அருகே ஆன்லைன் வகுப்பின்போது மொபைல் போன் வெடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்தார்.

2019 மார்சில், இளைஞர் ஒருவர் இருசக்கரா வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்ததில் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh Mobile phone blast


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->