திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் சலசலப்பு! ஸ்டாலினை உடன் ஒன்றாக மேடை ஏற மறுத்த ராகுல் காந்தி?தேர்தலுக்கு பின் நோ கூட்டணியா?
The turmoil in the DMK Congress alliance continues Rahul Gandhi refuses to take the stage with Stalin No alliance after the elections
தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் உறவு முன்பைப் போல இல்லை என்பதே அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் தொடங்கிய கருத்து வேறுபாடு, தற்போது ‘அதிகாரப் பகிர்வு’ விவகாரத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தரப்பில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அதற்கு திமுக தலைமை குளிர்ந்த பதில் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூட்டணிக்குள் மறைமுக அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், ராகுல் காந்தியின் மௌனம் கூடுதல் கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்த அவர், இம்முறை இதுவரை தமிழகத்திற்கு வராதது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வரை வந்தும், தமிழகத்தில் பிரச்சாரம் செய்யாதது அரசியல் முக்கிய சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், புதுச்சேரியில் ஒரே நாளில் இருந்தும், முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் தோன்றாததும் கூட்டணிக்குள் விரிசல் உள்ளதற்கான சுட்டிக்காட்டாக கருதப்படுகிறது. திமுக தரப்பில் நேரம் கேட்டபோதும், “டைம் இல்லை” என்ற பதில் வந்ததாக கூறப்படுவது அதிருப்தியை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் களப்பணியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், வேட்பாளர் அறிவிப்பு முதல் பிரச்சாரம் வரை மெதுவாக செயல்படுவதாக விமர்சனங்கள் உள்ளன. பல இடங்களில் திமுக தொண்டர்களே காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பணியாற்றும் நிலையும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமிழக வெற்றிக் கழகம் (TVK) போன்ற புதிய அரசியல் சக்திகள் காங்கிரஸ் நிர்வாகிகளை ஈர்க்க முயற்சிக்கின்றன என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி வெளிப்படையாக ஒன்றுபட்டதாக தோன்றினாலும், உள்ளுக்குள் பதற்றம் நீடிக்கிறது என்றே அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த ‘மௌனப் போர்’ தேர்தல் முடிவுகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The turmoil in the DMK Congress alliance continues Rahul Gandhi refuses to take the stage with Stalin No alliance after the elections