சர்ச்சைகளில் சிக்கி தவெக பொருளாளர் வெங்கட்ராமன்!மயிலாப்பூரில் போட்டி!வெங்கட்ராமன் மீது மனைவி புகார்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநில பொருளாளரும், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான வெங்கட்ராமன் மீது அவரது மனைவி மீனாட்சி பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையரிடம் அளித்த மனுவில், “2012ஆம் ஆண்டு வெங்கட்ராமனுடன் திருமணம் நடைபெற்றது. 2016ஆம் ஆண்டு யோகவர்ஷினி என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். குடும்ப நல நீதிமன்றம் சேர்ந்து வாழ உத்தரவிட்டிருந்தாலும், தற்போது என் கணவர் என்னுடன் வசிக்காமல், என் குழந்தையை வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்றுள்ளார்” என்று கூறியுள்ளார்.

மேலும், “என் குழந்தையை என்னிடம் காட்ட மறுக்கிறார். பார்க்க கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். என் குழந்தையை சட்டவிரோதமாக தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறார். எனவே, என் குழந்தையை மீட்டு தரவும், என்னை மிரட்டும் அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனாட்சி, “நாங்கள் வீட்டுக்கு சென்றாலும் உள்ளே அனுமதிக்காமல், கொன்று விடுவதாக மிரட்டுகிறார். முன்பு போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே தவெக தலைவர் விஜய் மீது அவரது மனைவி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது கட்சியின் முக்கிய நிர்வாகி மீது இவ்வாறு குடும்பத் தகராறு தொடர்பான புகார் எழுந்திருப்பது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thaveka treasurer Venkatraman embroiled in controversies Contest in Mylapore Wife complains against Venkatraman


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->