விஜய் ஆதரவுடன் முதல்வராகி ₹5000 கோடி சம்பாதிக்க முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்! எடப்பாடி மீது செங்கோட்டையன் கடும் குற்றச்சாட்டு
Edappadi tried to earn 5000 crore by becoming the Chief Minister with Vijay support I was the one who thwarted it Sengottaiyan makes strong allegations against Edappadi
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “விஜய் ஆதரவுடன் முதல்வராகி ₹5 ஆயிரம் கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். அந்த முயற்சியை நான் முறியடித்ததால், என்னை எதிர்த்து செயல்படுகிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், தனது வேட்புமனு தாக்கலில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், “10 முறை தேர்தலில் போட்டியிட்ட எனக்கு மனு தாக்கல் செய்வது தெரியாதா? வேண்டுமென்றே புகார்கள் கொடுத்து தடுக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் அதனை நிராகரித்தனர்” என்றார்.
அத்துடன், “என் மீது கொலைவெறி அளவுக்கு கோபம் வைத்திருக்கிறார். என்னை துரோகி என்று கூறுகிறார். ஆனால் நான் முதல்வர் பதவி வேண்டாம் என்று விலகியதால்தான் இந்த நிலை ஏற்பட்டது” என்றும் கூறினார்.
கட்சிக்குள் உழைத்தவர்களை நீக்கிவிட்டு, பின்னர் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது அவர் விமர்சனம் செய்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிமுக தரப்பில் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை. தேர்தல் நேரத்தில் எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Edappadi tried to earn 5000 crore by becoming the Chief Minister with Vijay support I was the one who thwarted it Sengottaiyan makes strong allegations against Edappadi