தவளைக்கும் , தவளைக்கும்.. டும்...டும்... டும்... பிரதமர் மோடியின் தொகுதியில் தான் இந்த வினோதம்..!! - Seithipunal
Seithipunal


 

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் ஒரு ஆண் தவளைக்கும், பெண் தவளைக்கும்  திருமணம் செய்து வைத்துள்ள வினோதமான சடங்கு நடந்துள்ளது. இது வினோத சம்பவம் குறித்த விபரங்கள் வருமாறு..

 

இந்தியாவில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு வித்தியாசமான சடங்குகளும், சம்பிரதாயங்களும் உள்ளன. அந்த வகையில் தான் இந்து மதத்தில் ஒரு வினோதமான சடங்கு உள்ளது.

கிராமங்களில் வாழும் இந்துக்கள் ஆண் தவளைக்கும், பெண் தவளைக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பொழியும் என்று நம்பி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கை காலம் காலமாக செய்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் இந்த தவளைக்கு திருமணம் செய்யும் சடங்கை அவர்கள் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் கவலைப் படாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில் தற்போது பிரதமர் மோடியின் தொகுதியான உத்திரபிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் இரு தவளைகளுக்கு இந்து மத முறைப்படி மணமக்களுக்கு பட்டாடை உடுத்துவது போல், இந்த தவளைகளுக்கு சிவப்பு நிறத்தில் பட்டாடை உடுத்தி, மங்கள வாத்தியங்கள் முழங்க ப்ரோகிதர் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை உச்சரிக்க ஊர் மக்கள் முன்பு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடியின் தொகுதியில் நடந்த இந்த வினோத சம்பவம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP Locals Held Marriage for Frogs in varanasi


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->