ஐ.நா. பொதுச் சபை தலைவர் இந்தியா வருகை! எதற்காக தெரியுமா?
UN General Assembly President visit India
ஐ.நா. பொதுச் சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் நாளை முதல் 26ஆம் தேதி வரை 5 நாள் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
26 ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மும்பை, ஜெய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
மேலும் டெல்லி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை நேரில் சந்தித்து பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனையில் இந்தியா சார்பில் நீண்ட நாட்களாக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்தும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வளரும் நாடுகளை உறுப்பினராக சேர்ப்பது போன்ற நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும்.
இந்த சுற்றுப்பயணம் ஐ.நா. மற்றும் இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.
English Summary
UN General Assembly President visit India