உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறிவிட்டதாக மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரால் மாணவர்கள் உட்பட உகரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் முழு பாதுகாப்புடன் மீட்கும் பணியை மத்திய அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மத்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக கூறினார். மேலும் மத்திய அரசு மேற்கொண்ட விசாரணையில், இந்தியர்கள் அநைவரும் கீவ்விலிருந்து வெளியேறிவிட்டனர் என்று தெரிய வந்திருப்பதாக கூறினார்.

இதுவரை அறுபது சதவீத இந்தியர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாகவும், மீதமுள்ள 40 சதவீதம் பேரில், ஏறக்குறைய பாதி பேர் கார்வ்வில் பகுதியில் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் உக்ரைனில் ஏறக்குறைய 20,000 இந்தியர்கள் சிக்கி இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் 12,000 பேர் வெளியேறிவிட்டதாகவும் உக்ரைனில் இருந்து தப்பிய சுமார் 1,700 இந்தியர்கள் போலந்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு வர அடுத்த சில நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்பட இருப்பதகவும்,  இந்திய விமானப்படை விமானம் நாளை காலை 4 மணிக்கு ருமேனியா செல்கிறது என்றும் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine war


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->