ஒரே ஆண்டுக்கு 2 பொதுதேர்வு - மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2023 ம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம். மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 

தேர்வு குறித்த மாணவர்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த உறுதியான தகவலை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அறிவித்துள்ளார். அதாவது, "10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை எழுத அனுமதிக்கும் திட்டம் வரும் 2025 – 26ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளார். 

இந்தத் தகவல் ஒரு தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் மற்றொரு தரப்பினர் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எப்படி எழுதுவது என்று கேள்வி எழுப்புகிறார்கள். இருப்பினும், மத்திய அரசின் இந்த திட்டத்தில் அனைவரும் இரண்டு முறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும், இரண்டு முறை எழுதினாலும் அவற்றில் எதில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two public exam at one year in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->