இந்தியாவில் 138 சீன செயலிகளுக்குத் தடை.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 288 சீன செயலிகளை ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியது. இந்த ஆய்வில், சீன செயலிகள் இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகளை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, மத்திய அரசு சீன நாட்டுடன் தொடர்புடைய நூற்று முப்பத்து எட்டு சூதாட்ட செயலிகள் மற்றும் தொண்ணூற்று நான்கு கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது. 

அந்த தகவலின் படி,  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சீன நாட்டின் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை அவசர நிலை அடிப்படையில் தடைசெய்யும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணிகளை துவக்கியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two hundrad and thirty eight china apps banned in india


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->