#Breaking: மத்திய அரசிடம் சரணாகதி அடைந்த ட்விட்டர் நிர்வாகம்.. வெள்ளைக்கொடி காண்பித்தது..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் டிஜிட்டல் கொள்கைக்கு உடன்பட்டு முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம், கூகுள் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயல்படுவதாக அறிவித்து இருந்தது.

ஆனால், ட்விட்டர் நிறுவனம் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுடன் விரோத போக்கை கடைபிடிப்பது போல நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தது. இறுதியாக தற்போது இந்திய அரசின் அறிவிப்புகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துள்ளது. 

மேலும், முந்தைய காலங்களில் மத்திய அரசுக்கு எதிரான ஹாஷ்டேக் ட்ரெண்டிங் செய்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனம் சிக்க தொடங்கிய நிலையில், அந்த பிரச்சனையில் இருந்து பல்வேறு பிரச்சனையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

குடியரசு தலைவரின் அதிகாரபூர்வ பக்கத்தை குறிக்கும் Blue Tick ஐ அகற்றி பின்னர் ஒரு விளக்கம் அளித்து, மீண்டும் அந்த பக்கத்திற்கு Blue Tick வழங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் கொள்கைகளுக்கு கட்டுப்படுத்தாக அறிவித்துள்ள ட்விட்டர் அறிவிப்பில், " இந்தியாவில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். புதிய விதிகளை சரியாக பின்பற்றி செயல்படுவோம் என இந்திய அரசுக்கு டுவிட்டர் உறுதி அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து இந்தியாவில் செயல்படுவோம் " எனவும் தெரிவித்துள்ளது.

புலிகேசி காலில் விழுந்த கதையாக ட்விட்டரின் கதை இன்று மாறிவிட்டது. இதுக்கு எதற்கு நீதிமன்றம் சென்று வாயாட வேண்டும்?. 

பருத்தி மூட்டை பேசாம குடோனிலேயே இருந்திருக்கலாம் வாத்தியாரே..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter Announce we Work with us Indian Govt As per Indian Govt rules 7 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->