அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோர்கள் தேவை; எச்1 பி விசாக்களுக்கு மீண்டும் ஆதரவு தெரிவிக்கும் டிரம்ப்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா-சவுதி முதலீட்டு கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது.  இதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்;

உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அந்த மக்கள் நம் மக்களுக்கு ‘சிப்’ எவ்வாறு தயாரிப்பது என்பதை கற்று கொடுக்க போகிறார்கள் என்றும், தான் பழமைவாத நண்பர்களை ஆதரிக்கிறதாகவும், அமெரிக்காவை மேலும் சிறந்ததாக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் தொழிற்சாலைகளை கட்டும் வெளிநாட்டு உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான மக்களை அவர்களுடன் அழைத்து வர வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த மக்களை தான் வரவேற்க போகிறதாகவும், பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் மக்கள், அந்த ஆலையை திறந்து, இயக்க மற்றும் வேலை செய்ய தங்கள் நாட்டில் இருந்து நிறைய பேரை அழைத்து வர அனுமதிக்காவிட்டால், நாங்கள் வெற்றிபெற முடியாது. என்று ட்ரம்ப் பேசியுள்ளார்.

மேலும், எச்-1பி விசாக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் தகுதிவாய்ந்த அமெரிக்க குடிமக்கள் நிரப்ப கடினமாக இருக்கும் நிலையில், சிறந்த வெளிநாட்டினரை பணி அமர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. இந்த விசாவுக்கு சமீபத்தில் அதிபர் டிரம்ப் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது புலம்பெயர்ந்தோர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump to back H1B visas in US


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->