ஆன்லைன் மோசடி: திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி வங்கிக் கணக்கில் ரூ.55 லட்சம் மாயம்..!
Trinamool Congress MP Kalyan Banerjee loses Rs 55 lakhs in bank account in online fraud
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் கல்யாண் பானர்ஜி. இவர் 04 முறை எம்பியாகியுள்ளார். தற்போது செரம்பூர் லோக்சபா எம்பியாக உள்ளார். இவருக்கு கோல்கட்டா உய்ரநீதிமன்ற வளாகத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியில் கணக்கு உள்ளது.
அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.55 லட்சம் பணம் மாயமாகி இருப்பதாக சைபர் க்ரைம் போலீசில் வங்கி அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில் மோசடி நபர்கள், கல்யாண் பானர்ஜியின் கணக்கின் KYC விவரங்களை புதுப்பிக்க போலியான பான் மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதற்காக, மோசடிகாரர்கள் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றியுள்ளனர். அத்துடன், சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை மாற்றிய பின்னர், படிப்படியாக ஆன்லைன் மூலமாக கிட்டத்தட்ட ரூ.55 லட்சம் வரை மோசடி செய்து, பணத்தை எடுத்துள்ளனர்.

குறித்த வங்கி கணக்கு பல ஆண்டுகளாக செயலற்ற கணக்காக இருந்துள்ளது. அதாவது, 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டுக்கு இடையில் அசான்சோல் எம்எல்ஏவாக கல்யாண் பானர்ஜி இருந்த போது, மற்ற எம்எல்ஏக்களுடன் சேர்ந்து இந்த வங்கிக் கணக்கு திறந்துள்ளார். இந்த கணக்கில் தான் அவரது சம்பள வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
அதன் பின்னர், காளிகாட் கிளையில் உள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கை கல்யாண் பானர்ஜி பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இதன் காரணமாக இந்த எஸ்பிஐ வங்கிக் கணக்கு செயலற்றதாக இருந்துள்ளது. காளிகாட் கிளையில் இருந்து ரூ.55 லட்சம் பணத்தை உயர்நீதிமன்ற கிளையின் வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனை செய்த போது தான் பணம் ஆன்லைன் வழியாக திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,செயலற்ற கணக்கு என்ற பிரிவின் கீழ் இருந்த இந்த வங்கிக் கணக்கானது தற்போது ஆன்லைன் மோசடி மூலம் பயன்படுத்தப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
English Summary
Trinamool Congress MP Kalyan Banerjee loses Rs 55 lakhs in bank account in online fraud