நண்பர்களே தனது பெண் தோழி பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது..? பள்ளிகளில் போலீசார் இருப்பார்களா..? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி...! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் வைத்து, பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் அதிர்வலைகள் நம்மை விட்டு நீங்காத நிலையில், அதே மாநிலத்தில் மற்றொரு பழையன் வன்கொடுமை சம்பவம் இடம் பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், சட்ட கல்லூரியில் வைத்து மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் சேர்ந்து இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவியை அவர்கள் வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்ததாகவும், படம் பிடித்து மிரட்டியதாகவும், கொடூரமாக கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 03 பேரையும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நண்பர்களே நண்பரை (பெண் தோழி) பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி கூறியுள்ளதாவது:

சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கு நான் வக்கீல் அல்ல, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு சில ஆண்கள் இந்த மாதிரியான குற்றங்களைச் செய்கிறார்கள். ஆனால், ஒரு நண்பர் தனது நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்ய முடியும்..? என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகளில் போலீசார் இருப்பார்களா..?இது மாணவர்களால் மற்றொரு மாணவிக்கு செய்யப்பட்டது. அவரை யார் பாதுகாப்பார்கள்..?என்று கேள்வி எழுப்பியுள்ளார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trinamool Congress MP asks friends what to do if his girlfriend sexually assaults him


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->