ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து முப்படை தளபதிகள்...! இன்று 2:30 மணிக்கு விளக்கம்...!
Tri Services Commanders on Operation Sindhoor Explanation today at 2point30
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்திய ராணுவம், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அறவே அழித்தது.

இதற்கு ''ஆப்ரேசன் சிந்தூர்" என்று பெயரிட்டது.இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
மேலும், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இதனிடையே,' ''ஆப்ரேசன் சிந்தூர்'' குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முப்படை தளபதிகள் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நிருபர்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளனர்' என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Tri Services Commanders on Operation Sindhoor Explanation today at 2point30