காதலால் வந்த விபரீதம்! ரகசியக் கர்ப்பம்... கழிவறையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த இளம்பெண்...! - அதிரவைக்கும் பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளி தாலுகாவில், விஸ்வநாதபுரா காவலர்கள் எல்லைக்குட்பட்ட பீரசந்திரா பகுதியில் செயல்பட்டு வரும் முன்னணி ஐபோன் உற்பத்தி நிறுவனத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள கழிவறையில், குப்பைத்தொட்டிக்குள் பச்சிளம் சிசுவின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கழிவறைக்கு சென்ற பெண் ஒருவர், குப்பைக்குள் சிசு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக நிர்வாகத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிசுவின் உடலை மீட்டு தீவிர விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட ஆய்வில், அந்த பச்சிளம் சிசு பிறந்த சில நிமிடங்களிலேயே கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதும், அதே கழிவறையிலேயே யாரோ பெண் ஒருவர் பிரசவம் செய்திருப்பதும் வெளிச்சமாயின. இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆராயப்பட்டபோது, ரேணுகா என்ற இளம்பெண் கடைசியாக அந்த கழிவறைக்கு சென்றது உறுதியாகியது.

உடனடியாக ரேணுகாவை காவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமணம் ஆகாத நிலையில் காதல் உறவால் கர்ப்பமாகியிருந்த அவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென நிறுவனத்திலேயே பிரசவ வேதனை அடைந்ததாக தெரியவந்தது. அதனால் அவசரமாக கழிவறைக்குச் சென்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பின்னர் ஏற்பட்ட பதற்றத்தில், பிறந்த உடனேயே குழந்தையை கொடூரமாகக் கொன்றுவிட்டு, உடலை குப்பைத்தொட்டியில் எறிந்ததுடன், சம்பவத்தை மறைக்க கழிவறையில் இருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்து எதுவும் நடக்காதது போல நடந்துகொண்டதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.

இதையடுத்து, உடல்நலக்குறைவு காரணமாக ரேணுகாவை காவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அவரின் உடல்நிலை சீராகிய பின்னர், கர்ப்பத்திற்கான காரணங்கள் மற்றும் இந்த கொடூரச் செயலின் பின்னணி குறித்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரேணுகா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிற்சாலை வளாகத்திலேயே நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tragedy brought about by love secret pregnancy young woman gave birth baby toilet What shocking background


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->