சர்க்கஸ் வித்தைக்காக 24 மணிநேரம் உயிருடன் புதைக்கப்பட்ட 27 வயது இளைஞர்; நெஞ்சை பதைபதைக்கும் காட்சியால் உறைந்து போன கிராம வாசிகள்..!
Tragedy befalls 27 year old man who was buried alive for 24 hours for a circus trick in Haryana
மக்கள் தங்கள் பிழைப்புக்காகவும், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் செய்யும் வித்தைகளும் சர்க்கஸ் சாகசங்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை ஆச்சரியப்படுத்தி மற்றவர்களை மகிழ்விக்கக்கூடும். ஆனால், அவற்றைச் செய்யும் சர்க்கஸ் கலைஞர்களுக்கு வாள் மீது நடப்பதை போன்றது. கரணம் தப்பினால் மரணம் என்பது போலான ஒரு சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.
உயிருடன் கல்லறை ஏறும் சாகசம் செய்ய முயன்ற ஒருவர், தனது திட்டத்தில் தவறு செய்தது மட்டுமல்லாமல், தனது அதீத தன்னம்பிக்கையின் காரணமாக உயிரையும் இழந்துள்ள சம்பவம் ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தின் தௌரு துணைப்பிரிவில் உள்ள கோரி கலான் கிராமத்தில் நிகழ்ந்தது.

ஒரு சர்க்கஸ் குழு, கிராம மக்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக 'உயிருள்ள கல்லறை' என்ற சாகசத்தைத் தொடங்கியது. இந்த சாகசத்தை, பயணம் செய்யும் சர்க்கஸ் குழுவின் மேலாளரான தீபக் என்ற 27 வயது இளைஞர் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது, உயிருடன் புதைத்தல் என்பது, உயிருடன் இருக்கும் ஒருவரை 24 மணி நேரம் ஒரு குழியில் புதைக்கும் ஒரு சடங்காகும். கிராமத்தின் நடுவில் ஒரு குழி தோண்டப்பட்டு, தீபக் ஒரு சாக்குப்பையில் கட்டப்பட்டு அந்தக் குழியில் புதைக்கப்பட்டார்.
அத்துடன், 24 மணி நேரத்திற்குப் பிறகு அவர் உயிருடன் வெளியே எடுக்கப்படுவார் என்று சர்க்கஸ் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், 12 மணி நேரம் கழித்து, அதாவது 36 மணி நேரம் கழித்து, உயிருடன் புதைக்கப்பட்டிருந்த தீபக் சாக்குப்பையிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். இதனால் அந்த சர்க்கஸ் செய்த நபர் இறந்து கிடந்துள்ளார்.

சர்க்கஸ் ஏற்பாட்டாளர்களின் அதீத தன்னம்பிக்கையால், தீபக் 24 மணி நேரம் உயிருடன் புதைக்கப்பட்ட, நிலையில், பின்னர் அவர் மூச்சுவிடாமல் திணறி இறந்து போய்யுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அதனை வேடிக்கை பார்க்க வந்த உள்ளூர் மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.
கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளதை தொடந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். பணத்திற்காக கிராம மக்களை நம்ப வைக்கும் இதுபோன்ற சர்க்கஸ் வித்தைகளை நிகழ்த்தும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Tragedy befalls 27 year old man who was buried alive for 24 hours for a circus trick in Haryana