சபரிமலை சன்னிதானத்துக்கு நெய்யைக் கொண்டு செல்வதில் முறைகேடு; தரம் குறைந்த தமிழ்நாடு நெய் கலப்படம்; விசாரணையில் அதிர்ச்சி..!
There is a case of adulteration of low quality Tamil Nadu ghee in transporting ghee to the Sabarimala shrine
சபரிமலை ஐயப்பன் கோவில் சந்நிதானத்திற்கு ஒன்றரை லட்சம் லிட்டருக்கும் அதிகமான தரம் குறைந்த நெய் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளதை தொடந்து விசாரணை நடத்தப்பட்டது. பத்தனம்திட்டாவில் இருந்து பம்பைக்கு நெய்யைக் கொண்டு செல்லும் வழியில், உயர்தர மில்மா நெய்யை மாற்றிவிட்டு, தரம் குறைந்த தமிழ்நாடு நெய்யைக் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சுமார், ஒரு லட்சத்து 77 ஆயிரம் லிட்டர் நெய் பாக்கெட்டுகளில் சுமார் 35 பேட்ச் எண்கள் இருக்க வேண்டிய இடத்தில், வெறும் 06 பேட்ச் எண்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, டெண்டர் விதிமுறைகளை மாற்றி குறிப்பிட்ட ஒரு நபருக்கு சாதகமாக ஒப்பந்தம் வழங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த முறைகேட்டில் மில்மா மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பைக் கண்டறிந்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அத்துடன், முறைகேட்டைத் தொடர்ந்து மில்மா திருவனந்தபுரம் மண்டல யூனியன் உடனடியாகக் கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகப் பொறுப்பை அரசே ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
There is a case of adulteration of low quality Tamil Nadu ghee in transporting ghee to the Sabarimala shrine