ஈரோட்டில் அதிர்ச்சி; இன்ஸ்டாவில் நெருங்கி பழகிய திருமணமான பெண்; இரவில் தேடி வந்த நபர்; கொலையில் முடிந்த திடுகிட்டும் சம்பவம்..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான வினோதினி என்பவர் திருப்பூரைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் வினோதினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருக்கமாக பேசி பழகி வந்துள்ளனர்.

வினோதினி குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு வெடித்ததால், வினோதினி நவநீதகிருஷ்ணனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நவநீதகிருஷ்ணன் வினோதினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, அவரது கணவருக்கு தொடர்ந்து அனுப்பியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்பட்டுள்ளது. இதனால் வினோதினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று கணவரைப் பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு வினோதினியைச் சந்திக்க நவநீதகிருஷ்ணன், அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் வினோதினியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரம் அடங்காத நவநீதகிருஷ்ணன், வினோதினியின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி சற்றும் யோசிக்காமல் தீ வைத்து கொளுத்தியுள்ளார். தீ பற்றி எரிந்த நிலையில், உடல் முழுவதும் தீக்காயமடைந்த வினோதினியை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

ஆனாலும், சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே இந்த சம்பவத்தின் போது தீக்காயமடைந்த நவநீதகிருஷ்ணன், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நலம் தேறியதும் கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வினோதினி உயிரிழப்பதற்கு முன்பு, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் "நவநீதகிருஷ்ணன்தான் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்" என தெரிவித்துள்ளார். இந்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், ஈரோடு போலீசார் நவநீதகிருஷ்ணன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பு, நாளடையில் நெருக்கமான உறவிற்கு கொண்டு சென்றதில் இளம்பெண்ணின் திருமண வாழ்க்கையை சீரழிந்துள்ளதோடு, இறப்பில் முடிந்துள்ளமை ஈரோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man kills married woman he met on Instagram by dousing her with kerosene and setting her on fire


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->