15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றவர்..யார் இவர்.? - Seithipunal
Seithipunal


இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜீலை 23ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும்.

 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தபோது, நீதிபதி இவரிடம் முகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார்.

கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிரம்படி கொடுத்து சிறையில் அடைக்க சொன்னார். இவர் ஒவ்வொரு அடி விழும்போதும் 'பாரத் மாதா கீ ஜெய்" என முழங்கினார். பிறகு இவர் 'சந்திரசேகர ஆசாத்" என்று அழைக்கப்பட்டார்.

சுதந்திரத்தை அடைய, இந்துஸ்தான் குடியரசு அமைப்பை தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டதால், 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இவரை ஆங்கிலேய காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது பிடிபடக்கூடாது என்று தன்னைத்தானே (24 வயது) சுட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today freedom fighter Chandrashekar Azad birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->