சூசகமாக குத்திக்காட்டிய பிரதமர்.! கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, "முடியாது என்று நினைத்தது கூட நிறைவேறிக் கொண்டு தான் இருக்கின்றது. என்று பெருமிதமாக தெரிவித்திருக்கின்றார்.

துக்ளக் பொன்விழா ஆண்டு நிகழ்வானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது, "இந்த நிகழ்ச்சி எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஆசிரியர் சோ இன்று இல்லை என்றாலும், கடந்த 50 ஆண்டுகளாக அவரது பணிகள் பெருமைக்குரிய ஒன்று. முதல் பக்கத்தில் இருக்கும் கேலிசித்திரம் எளிய முறையில் மக்களுக்கு பல விஷயங்களை தெரிவித்து விடும்.

நாட்டுக்கு வழிகாட்டும் விதமாக பல நூற்றாண்டுகளாக தமிழகம் இருக்கின்றது. சமுதாய சீர்திருத்தம், பொருளாதார முன்னேற்றம் உலகின் மிக தொன்மையான மொழியின் இருப்பிடம் என தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றது.

முக்கிய விழாவில் நான் தமிழில் சில வார்த்தைகளை கூறுவது வழக்கம். இதனை பெருமை தருவதாக பலரும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இரண்டு ராணுவ தொழிற்சாலை வழித்தடங்களை நாட்டில் கொண்டுவர திட்டமிட்டபோது தமிழகம்தான் தேர்வு செய்யப்பட்டது.

இதன் மூலமாக தமிழகம் அதிக தொழிற்சாலைகளை பெற வாய்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கக்கூடும். தமிழ்நாட்டிந் வளர்ச்சிக்கு ஜவுளித் துறையில் அதிகம் பங்கலித்து இருக்கின்றது.

இதனை நவீனப்படுத்த மத்திய அரசு நிதி உதவிகளை செய்து வருகின்றது. மீன்வளம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. மேலும், இதனை உயர்த்த மத்திய அரசு விருப்பம் கொண்டு இருக்கின்றது.

இதற்கு தேவையான நிதியுதவி மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவது தான் எங்களுடைய குறிக்கோள். இரண்டு நாட்களுக்கு முன்புகூட தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன் பிடி படகுகள் வழங்கப்பட்டது. பல எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசு நாட்டின் முன்னேற்றத்திற்கு கொண்டுவந்துள்ள திட்டங்கள் மிக நீளமான பட்டியல் கொண்டது.

இந்தியா வேகமாக வளர்ந்து வருகின்றது. முடியாது என்று நினைத்த விஷயம் கூட நிறைவேறிக் கொண்டு இருக்கிறது. சிலரால் இதையெல்லாம் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் மக்களை தவறாக வழிநடத்த எண்ணுகின்றனர்." என்று அவர் சூசகமாக பிரிவினைவாதிகளை குறிப்பிட்டு பேசினார். அவர் யாரை குறிப்பிடுகிறார்? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thuglak 50th anniversary modi speech


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal