ஓட்டலில் ஏற்பட்ட தகராறு - 3 இளைஞர்கள் குத்திக் கொலை.!! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள தாம்தரி மாவட்டம் பொய்னா பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று இரவு சாப்பிட வந்த 8 இளைஞர்கள், ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அங்கு உணவு சாப்பிட வந்த மூன்று இளைஞர்கள் உணவு சாப்பிட வந்த போது அவர்களுக்கும் ஓட்டலில் தகராறு செய்துகொண்டிருந்த 8 இளைஞர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றிய நிலையில் இளைஞர் ஒருவர் எதிர் தரப்பை சேர்ந்த மூன்று இளைஞர்களையும் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். 

இந்த சம்பவத்தில் 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 8 இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓட்டலில் சாப்பிட வந்த இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three youth murder in chatisgarh hotel


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->