ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் தலையை நசுக்கி அரங்கேறிய கொடூரம்.! மனதை உறையவைக்கும் கொடூரம்.!
three women from same family killed by a mysterious man police investigating for the suspicious man
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த மூன்று பெண்களை கொலை செய்த கொலைகாரனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பெண்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளை செய்தவர் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறை தீவிரமான விசாரணையில் இறங்கி கொலையாளிகளை தேடி வருகிறது.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்கள் சோலாபூரைச் சார்ந்த தீபாளி பாலு மாலி (25), சங்கீதா மகாதேவ் பாலி (59), பாராபாய் பாபாஜி மாலி (45) என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இவர்களை மர்ம நபர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பெண்கள் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொலையாளிகளின் அடையாளம் குறித்து அப்பகுதியில் உள்ள மக்களிடமும் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
three women from same family killed by a mysterious man police investigating for the suspicious man