நடுரோட்டில் தகராறு - தட்டிக் கேட்ட போலீசாரின் சட்டையை பிடித்த வாலிபர்கள்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் காமராஜர் சாலையில் ராஜா தியேட்டர் சிக்னல் முதல் பிருந்தாவனம் வரை சாலையின் இரு பக்கமும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த நிலையில் அப்பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் இன்று மோதி கொண்டதை அடுத்து வாகனத்தில் வந்தவர்கள் சாலையில் நின்று தகராறு செய்தனர். 

அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படவே பின்னால் வந்த, காரின் ஓட்டுநர் வழிவிடக்கோரி ஹாரன் அடித்ததில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் இரண்டு பேர் ஓடி வந்து கார் ஓட்டுனரிடம் தகராறு செய்தனர்.

அந்த நேரத்தில், அந்த வழியாக வந்த மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி வம்சிதரெட்டி, ‘ஏன் ரோட்டில் தகராறு செய்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மூன்று வாலிபர்களும் சீருடையில் இருந்த எஸ்.பி வம்சி ரெட்டியின் சட்டையை பிடித்து அடிக்க பாய்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே அவர் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை வேனில் ஏற்ற முயன்றனர். ஆனால், அந்த வாலிபர்கள் வேனில் ஏற மறுப்புத் தெரிவித்து, காவலர்களின் சட்டையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டனர். 

ஒருவழியாக மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நடுரோட்டில் சண்டை போட்டவர்களை தடுக்க முயன்ற எஸ்பி மற்றும் போலீஸாரின் சட்டையை பிடித்து வாலிபர்கள் ரகளை செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for attack police in puthuchery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->