மயக்க மருந்து கொடுத்து சிறுமி கூட்டு பலாத்காரம் -  காதலன் உள்பட 3 பேர் கைது! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளம் மூலம் பழகி, ஆசைவார்த்தை கூறி சிறுமியை விடுதிக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள சொவ்வாய் பகுதியை சேர்ந்த சங்கீத் என்ற வாலிபர் சமூக வலைத்தளத்தில் மூழ்கி கிடந்துள்ளார்.அப்போது இவருக்கு, சமூக வலைத்தளம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.அதன் பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்தநிலையில்  சிறுமியை ஆசைவார்த்தை கூறி கண்ணூரில் உள்ள விடுதிக்கு வருமாறு காதலன் சங்கீத் அழைத்துள்ளார்  . அதன்படி,  முன்பதிவு செய்திருந்த அறைக்கு சிறுமியை சங்கீத் அழைத்து சென்று உள்ளார். அப்போது  தனது நண்பர்களான ஆனப்பாலம் பகுதியை சேர்ந்த அபிஷேக் , வைத்தியர் பீடிகை பகுதியை சேர்ந்த ஆகாஷ்ஆகிய 2 பேரையும் விடுதிக்கு வரவழைத்தார்.

அதனை தொடர்ந்து விடுதியில் வைத்து சிறுமிக்கு சங்கீத் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து உள்ளார். அதனை வாங்கி குடித்தாள். அதை வாங்கி குடித்த சிறுமி சற்று நேரத்தில் அவள் மயக்கம் அடைந்தாள். இதையடுத்து சங்கீத் உள்பட 3 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி கண்ணூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் சிறுமியிடம் காதல் வயப்பட்டது போல சங்கீத் நடித்து விடுதிக்கு வரவழைத்ததும், அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சங்கீத், அபிஷேக், ஆகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three arrested for drugging minor girl


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->