மும்பையில் ஒரே நாளில் ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் அழிப்பு.!!
thousand five hundrad crores worthable seized drugs destroy in mumbai
மும்பையில் ஒரே நாளில் ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் அழிப்பு.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நேற்று ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் முன்னிலையில் மும்பை சுங்கத்துறையினர் அழித்தனர்.
இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "டிஆர்ஐ, மும்பை மண்டலப் பிரிவினால் நேற்று ரூ.1500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

பொருள்களை அழிக்கும் பணிகள் மே 26 (நேற்று) அன்று மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளின் தெரிவித்ததாவது:-
மும்பையில், 9.035 கிலோ கோகைன், 16.633 கிலோ ஹெராயின், 198.1 கிலோ மெத்தம்பேட்டமைன், 2118 கிராம் கஞ்சா, மாண்ட்ராக்ஸ் மாத்திரை என்று மொத்தம் ரூ.1,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
thousand five hundrad crores worthable seized drugs destroy in mumbai