நான் தற்கொலை செய்ய காரணம் அவர்கள் தான்...! -அதிர்ச்சியூட்டும் கடிதம் எழுதி உயிரை மாய்த்த இன்ஜினீயர்!
They reason I committed suicide Engineer who committed suicide by writing shocking letter
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான மின்சார பைக் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் ஹொமொலொகேஷன் பிரிவில் இன்ஜினீயராக பணியாற்றி வந்தவர் அரவிந்த் (38).அவருக்கு நிறுவனத்தின் தலைவர் பஹ்வேஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரி சுப்ரதா குமார் தாஸ் ஆகியோர் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தி தொந்தரவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவரின் வேலைப்பளுவை மிக அதிகமாக்கி, வழங்க வேண்டிய சம்பளத்தையும் நீண்ட நாட்களாக வழங்காமல் இழுத்தடித்துள்ளனர் என கூறப்படுகிறது.இத்தகைய மன அழுத்தத்தில் தள்ளப்பட்ட அரவிந்த், கடந்த மாதம் 28-ந்தேதி விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.
மேலும்,போலீசார் விசாரணை நடத்தியபோது, அரவிந்த் பணிபுரிந்த அதே நிறுவனத்திலிருந்து அவரது வங்கி கணக்கில் ₹17 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
பின்னர் அரவிந்தின் வீட்டை போலீசார் சோதனை செய்தபோது, அவர் தற்கொலை செய்யும்முன் எழுதி வைத்திருந்த மரணக் குறிப்பு (suicide note) கைப்பற்றப்பட்டது.
அந்தக் கடிதத்தில்,“எனது தற்கொலைக்கு பஹ்வேஷ் அகர்வால் மற்றும் சுப்ரதா குமார் தாஸ் ஆகியோர்களே காரணம். எனக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காமல் மன அழுத்தம் ஏற்படுத்தினர்,”என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் மற்றும் புகாரின் அடிப்படையில், போலீசார் இரு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூருவின் தொழில்துறை வட்டாரங்களில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
English Summary
They reason I committed suicide Engineer who committed suicide by writing shocking letter