யுனெஸ்கோ பட்டியலில் இடம்பிடித்துள்ள தீபாவளி பண்டிகை: 'நாட்டிற்கு மிகுந்த பெருமைக்குரிய தருணம்': துணை ஜனாதிபதி பெருமிதம்..!
The Vice President expressed pride stating that the inclusion of the Diwali festival in the UNESCO list is a moment of great honor
தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ அமைப்பின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளமை நம் நாட்டிற்கு கிடைத்த மிகுந்த பெருமைக்குரிய தருணம் என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.
டில்லியில் நேற்று நடைபெற்ற யுனெஸ்கோ- மத்திய அரசு குழுவின் 20-வது அமர்வில் தீபாவளி, யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாசார பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது குறித்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
''தீபாவளி வெறும் பண்டிகை மட்டுமல்ல, இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவின் வெற்றியையும், அவநம்பிக்கை மீதான நம்பிக்கையின் வெற்றியையும், அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியையும் அடையாளப்படுத்தும் ஒரு நாகரிகச் செய்தியாகும்.

பண்டிகையின் உலகளாவிய தத்துவம் நம்பிக்கைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து, இந்திய மக்களின் உணர்வை கொண்டது.
இந்த உலகளாவிய அங்கீகாரம், நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் மரபுகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், பெருமையுடன் கொண்டாடவும் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். மேலும் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்குள் நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வுக்கான மதிப்புகளை பலப்படுத்துகிறது.'' என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
English Summary
The Vice President expressed pride stating that the inclusion of the Diwali festival in the UNESCO list is a moment of great honor