அலுவலக தொடர்புகளில் ஹரிஜன், கிரிஜன் சொற்களை பயன்படுத்த ஹரியானாவில் தடை..!
The use of the terms Harijan and Girijan in official communications has been banned in Haryana
அலுவலக தொடர்புகளில் ஹரிஜன், கிரிஜன் வார்த்தைகளை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை குறிப்பிட ஹரிஜன் மற்றும் கிரிஜன் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி, அனைத்து துறை செயலார்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், " இந்திய அரசியலமைப்புச் சட்டம் பட்டியல் சாதியினர் மற்றும் மற்றும் பழங்குடியினரைக் குறிக்க இந்தச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதில்லை" என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மாநில அரசால் ஆய்வு செய்யப்பட்ட போது, சில துறைகள் மேற்கூறிய அறிவுறுத்தல்களைக் கடுமையாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனகே கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, மகாத்மா காந்தி பட்டியலின மக்களை ஹரிஜன்ஸ் என அழைத்தார். அதன் பொருள் கடவுளின் மக்கள் என்பதாகும். எனினும் அம்பேத்கர் அவ்வாறு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாகும், அவர்களை தலித் என அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The use of the terms Harijan and Girijan in official communications has been banned in Haryana