கணவர் சாக்லெட் வாங்கி தரவில்லை என்று மனைவி செய்த விபரீத செயல்.! - Seithipunal
Seithipunal


கணவர் சாக்லேட் வாங்கி தராததால் விரக்தியடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெண்ணூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கௌதம் இவரது மனைவி நந்தினி. இவர்கள் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கௌதம் பெங்களூருவில் உள்ள சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கௌதம் தன்னுடைய பணிக்கு கிளம்பும் போது அவரிடம் தனக்கு சாக்லேட் வாங்கி வரும்படி கூறி இருக்கிறார் நந்தினி. ஆனால் கௌதம் வாங்கி வர முடியாது என சொல்லிவிட்டு வேலைக்கு சென்று இருக்கிறார். தான் வேலை செய்யும் இடத்திலிருந்து நந்தினிக்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த கௌதம் அருகில் இருப்பவர்களிடம் சொல்லி தன் வீட்டில் சென்று பார்க்குமாறு கூறி உள்ளார்.

அவர்கள் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. நந்தினி வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கி இருக்கிறார் அப்போது அவருக்கு உயிர் இருக்கவே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் நந்தினி.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த விசாரணைக்கு நந்தினியின் தற்கொலை கடிதம் கிடைத்திருக்கிறது "அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என எழுதியுள்ளார். மேலும் இது குறித்து அவரது கணவரான கௌதமிடம் விசாரித்த போது நான் சாக்லேட் வாங்கிக் கொடுக்காததால் தான் என் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என மனமுடைந்து பதிலளித்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The tragic act of the husband and wife who broke their heart because the wife who asked for chocolate as a wish could not buy it


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->