மிளகாய் பொடியை தூவிய ஆசிரியர்..பள்ளி கூடத்தில் பரபரப்பு!
The teacher who sprinkled chili powder commotion in the school courtyard
தெலுங்கானாவில் 2-ம் வகுப்பு மாணவர்களின் கண்களிலும், காதுகளிலும் மிளகாய் பொடியை தூவிய ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் குதவன்பூர் என்ற கிராமத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில், 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் சங்கர் என்பவர் பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது, மாணவர்கள் சிலர் ஒழுங்கீனத்துடன் நடந்து கொண்டனர் என சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் சங்கர், அந்த மாணவர்களின் கண்களிலும், காதுகளிலும் மிளகாய் பொடியை தூவியதால் மாணவர்கள் கதறி அழுதனர்.உடனடியாக அவர்கள் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி முறையிட்டதால் மாணவர்களின் பெற்றோர், சங்கரிடம் வந்து நியாயம் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களையும் அவர் திட்டியிருக்கிறார் என சொல்லப்படுகிறது . இதனையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் முழுமையாக விசாரிக்கும்படி கல்வி அதிகாரியிடமும் முறைப்படி புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு வந்தபோது, ஆசிரியர் சங்கர் தலைமறைவானார். பள்ளியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து விட்டு சென்றனர்.
English Summary
The teacher who sprinkled chili powder commotion in the school courtyard