ஆளும் அரசு அறிவிப்பு அரசாக இருந்து வருகிறது..முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடும் தாக்கு..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் உள்ள என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு 10 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்று சொல்லி அதை கூட நிறைவேற்றவில்லை. இந்த அரசு  வெறும் அறிவிப்பு அரசாக இருந்து வருகிறது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். 

இது குறித்து  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி  கூறுகையில்:உலகிலேயே விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாகரீக சமுதாயமாக நமது தமிழினம் விளங்குவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்று. இன்று நாடு முழுவதும் விவசாயிகள் படும் பாடு நமக்கு மிகுந்த கவலையை தருகிறது. பாரத நாடு அடிப்படையிலேயே ஒரு விவசாய நாடு.  இதனை எந்த அரசாங்கமும் மதித்து நடக்க வேண்டும்.  உழவுத் தொழிலை பாதுகாத்து விவசாயிகளின் நலனை பேணுவது ஒரு அரசாங்கத்தின் மிக முக்கிய கடமையாகும்.  இனிவரும் காலங்களிலாவது, மத்திய அரசு  விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

புதுச்சேரி மாநிலத்தில் 2016 முதல் 2021 வரை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது விவசாயிகளுக்கு 21 கோடி ரூபாய் கூட்டுறவு கடனை ரத்து செய்தது, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம், பயிர்களுக்கு மானியம் திட்டம், வெள்ளம் புயல்  காலங்களில் நிவாரணம் மற்றும் விதைகளுக்கும் விதை பொருட்களுக்கும் ஊக்கத்தொகை. இவைகள் எல்லாம் வழங்கினோம். இப்போது புதுச்சேரியில் உள்ள என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு 10 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்று சொல்லி அதை கூட நிறைவேற்றவில்லை. இந்த அரசு  வெறும் அறிவிப்பு அரசாக இருந்து வருகிறது இந்த நிலை மாற வேண்டும் விவசாயிகளுக்கு நாங்கள் நடைமுறைப்படுத்தியதைப் போன்ற அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல இனியாவது விவசாயிகளுக்கு நல்ல காலம் பிறக்கட்டும். பொதுமக்கள் குழந்தைகளுக்கு, உழவுத் தொழிலின் அருமையையும் விவசாயிகளின் பெருமைகளையும், நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களை  மதித்து நடக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

பொங்கல் திருநாள், உழவர் திருநாள் ஆகியவை வெறும் பண்டிகைகள் மட்டுமல்ல, நமது வாழ்வியலின் ஓர் அங்கமாக இருக்கிறது, என்பதனைஅடுத்த தலைமுறைக்கு  எடுத்துச் சொல்ல வேண்டும்.  பிறக்கும் இந்த தை மாதம் நம் அனைவர் வாழ்விலும், வளத்தையும்  நலத்தையும் நல்க வேண்டும் என்று இறைவனை  வேண்டிக்கொள்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The ruling government has been a declaration government Former Chief Minister V Narayanasamy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->