''ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் சமூகமே முற்போக்கான சமூகம்; நாட்டின் முன்னேற்றத்துக்கு கல்வியே அதிகாரமளிக்கிறது''; குடியரசு தலைவர்..!
The President murmu says that education is the power that empowers the countrys progress
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 48 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது, விருதாளர்களின் சாதனைகளை விளக்கும் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாறுகையில் கூறியதாவது;
ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் சமூகமே முற்போக்கான சமூகம் என்றும், நாட்டின் வளர்ச்சியில் சிறந்த கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவை ஓர் அறிவுசார் சக்தியாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய திறன் மையமாகவும் நிலைநிறுத்துவதே நாட்டின் முன்னுரிமை என்றும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அதாவது, ''அறிவே ஆற்றலின் மிகப் பெரிய மூலம்'' என்று குறிப்பிட்ட முர்மு, தனிநபர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கவும், தெளிவான முடிவுகளை எடுக்கவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கவும் கல்வியே அதிகாரமளிக்கிறது என்றும், நாட்டை கட்டமைப்பதில் முன்னணியில் இருப்பவர்கள் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் பெண் கல்விக்கும் பெண் உரிமைக்கும் மிக முக்கிய பங்காற்றியவர் சாவித்ரிபாய் பூலே என்று நினைவுகூர்ந்துள்ளார். இந்த ஆண்டு மூன்று துறைகளைச் சேர்ந்த 82 ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்கியுள்ளார்.
இவர்களில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையைச் சேர்ந்த 48 ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 21 ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தைச் சேர்ந்த 13 திறன் பயிற்சியாளர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.
English Summary
The President murmu says that education is the power that empowers the countrys progress