விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் விபரீத முடிவு!
The police officer who caused the accident has faced a disastrous outcome
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் செந்தில் தரமனி ரெயில் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தரமணி காவல் நிலைய தலைமை காவலராக பணிபுரிந்து வந்த செந்தில் நேற்று சாதாரண உடையில் காரில் கிண்டி, மடுவின்கரை மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த முருகேகசன் என்பவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து விபத்து ஏற்படுத்திய போலீஸ்காரர் செந்திலை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது காரை ஒட்டிய போலீஸ்காரர் செந்தில் மதுபோதையில் இருந்ததையடுத்து போலீசார் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ,அவரை விசாரணைக்காக இன்று காலை போலீஸ் நிலையம் வர அழைத்து இருந்தனர். இதற்கிடையே போலீஸ்காரர் செந்தில் விபத்து ஏற்படுத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் மிகவும் மனவேதனைய அடைந்த அவர்
இன்று காலை செந்தில் தரமனி ரெயில் நிலையம் அருகே பெட்ரோல் கேனுடன் சென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் தரமணி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
The police officer who caused the accident has faced a disastrous outcome