இந்தியர்களுக்கு அடிச்சது யோகம்..இந்தியா–ரஷ்யா வேலைவாய்ப்பு ஒப்பந்தம்! சரியான நேரத்தில் தோள் கொடுத்த ரஷ்யா!
The Indians were lucky to have the India Russia employment agreement Russia lent a shoulder at the right time
அமெரிக்கா தனது விசா விதிமுறைகளை கடுமையாக்கி இந்தியர்களுக்கு சவால்களை உருவாக்கி வரும் வேளையில், ரஷ்யா இந்திய தொழிலாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளது. வரவிருக்கும் மாதத்தில் இந்தியா வரவுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகையின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க வேலைவாய்ப்பு ஒப்பந்தம் கையொப்பமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 70,000 இந்தியர்கள் ரஷ்ய தொழில்துறைகளில் அதிகாரப்பூர்வமாக வேலைவாய்ப்பு பெற உள்ளனர். இது, இந்தியர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளையும், ரஷ்யாவுக்கு திறமையான மனிதவளத்தையும் வழங்கும் வகையில் ஒரு இரு தரப்புக்கும் நன்மையான ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் பொருளாதாரம் தற்போது வேகமான வளர்ச்சியைக் கண்டுவருகிறது. குறிப்பாக கட்டுமானம், பொறியியல், மின்னணுவியல், ஜவுளி, தொழில்நுட்ப உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் திறமையான தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது.
இந்த நெருக்கடியை சமாளிக்க ரஷ்ய அரசு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை திறன்களைக் கொண்ட பணியாளர்கள் அதிகம் இருப்பதால், அவர்களை ரஷ்யாவில் பணியமர்த்துவது இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக பரஸ்பர நன்மை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா–ரஷ்யா வேலைவாய்ப்பு ஒப்பந்தம் கையொப்பமானதும்,ரஷ்யாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு,நியாயமான ஊதியம்,மற்றும் சமூக நலன்கள் ஆகியவை வழங்கப்படும்.
மேலும், இந்த ஒப்பந்தம் சட்டபூர்வ இடம்பெயர்வு நடைமுறைகளையும்,பணியாளர் உரிமைகள் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அமைய உள்ளது.மாஸ்கோவில் செயல்படும் இந்திய வணிகக் கூட்டமைப்பு (IBA) இந்த முயற்சியை வரவேற்று,“இந்தியா–ரஷ்யா உறவுகளை புதிய உச்சிக்கு கொண்டு செல்லும் மைல்கல் இது,” என்று தெரிவித்துள்ளது.
IBA தலைவர் ஷம்மி மனோஜ் கூறியதாவது:“இந்தியா உலகிலேயே மிகுந்த திறமை வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட நாடு.
அதே சமயம் ரஷ்யா, தொழில்துறை மாற்றத்தின் முக்கிய கட்டத்தை கடந்து வருகிறது.இந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு திறமையான மனிதவளத்தையும், இந்தியர்களுக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்பையும் வழங்கும்.”
அவர் மேலும்,“இந்திய தொழிலாளர்கள் சட்டவிரோத ஆள்சேர்ப்பு வழிகளால் சிக்காமல் இருக்க அரசு மட்டத்திலும் கடுமையான கண்காணிப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்,”
என்றும் கூறினார்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்,ரஷ்யாவுக்குச் செல்லும் இந்திய தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் மொழிப் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்படும்.மேலும், நியாயமான ஆள்சேர்ப்பு முறைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தற்போது வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ள நிலையில்,ரஷ்யா இந்தியர்களுக்கு கதவுகளைத் திறக்கிறது என்பது உலக அளவில் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.சீனாவும் இதேபோல் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் இந்த முடிவு இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான, கண்ணியமான வேலைவாய்ப்பை வழங்கும் புதிய துவக்கமாக கருதப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது:“இந்த ஒப்பந்தம் வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் மேலும் பல இந்திய நிபுணர்கள் ரஷ்ய தொழில்துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.இது இந்தியாவின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் மிகப் பெரிய முன்னேற்றமாகும்.”
புடின்–மோடி சந்திப்பின் போது கையொப்பமிடப்படவுள்ள இந்த இந்தியா–ரஷ்யா வேலைவாய்ப்பு ஒப்பந்தம்,
இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதோடு, ஆயிரக்கணக்கான இந்திய குடும்பங்களுக்கும் புதிய நம்பிக்கை கதவுகளைத் திறக்கவுள்ளது.இது இந்திய வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்யாயமாக மாறும் என நம்பப்படுகிறது.
English Summary
The Indians were lucky to have the India Russia employment agreement Russia lent a shoulder at the right time