மனைவியை இரவில் உல்லாசத்திற்கு அழைத்த கணவன்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!
The husband who took his wife out for a night of fun the shocking twist at the end
2-வது திருமணம் செய்துகொண்ட மனைவியை இரவில் உல்லாசத்திற்கு அழைத்த கணவனை கொலை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் குப்வாட் தாலுகாவில் வசித்து வந்தவ 53 வயதான அனில் லோகண்டேவின் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 27 வயதான ராதிகா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் ராதிகாவுக்கு இந்த திருமண வாழ்க்கைக்கு விருப்பம் இல்லை எனத்தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவில் அனில் லோகண்டே மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைக்க விருப்பம் இல்லாத ராதிகா கணவன் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து பின்னர் கணவன் அனில் லோகண்டே உறங்க சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணி அளவில் கணவர் அனில் லோகண்டே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. அப்போது ராதிகா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து வந்து படுக்கையில் இருந்த கணவரை கண்மூடித்தனமாக தாக்கி யுள்ளார் .இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதற்கிடையே தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அனில் லோகண்டேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அவரை கொலை செய்த ராதிகாவை போலீசார் கைது செய்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராதிகாவின் விருப்பத்துக்கு மாறாக அவரது தந்தை வயதுள்ள அனில் லோகண்டேவுக்கு திருமணம் செய்து வைத்தார்களா?, அவரை கொலை செய்ய துணிந்தது ஏன்? என்பது போன்ற தகவல்களை திரட்ட போலீசார், ராதிகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The husband who took his wife out for a night of fun the shocking twist at the end