மனைவி சமாதிக்கு நினைவுச்சின்னம் வைத்த கணவர்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் கனபர்த்தியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி மானசா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தனது மனைவி மானசா மீது சிவராஜ் அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார்.

இந்நிலையில் மானசா திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது மனைவி உடல் ரீதியாக  தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டதை உணர்ந்த சிவராஜ் மனைவியின் சமாதியில் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மனைவி மானசாவின் சமாதியில் தன்னை பதிக்கும் வகையில் காதல் சின்னமான 8 அடி உயரத்தில் இதய வடிவிலான நினைவு சின்னத்தை அமைத்துள்ளார்.

சிவராஜ்  தனது மகள்களுடன் தினமும் மனைவியின் சமாதிக்கு சென்று வணங்கி வருகிறார்.

ஷாஜகான் தனது மனைவி மீதான அன்பின் காரணமாக தாஜ்மஹால் கட்டினார். நான் மனைவியின் நினைவு என்றும் நிலைத்திருக்க காதல் நினைவுச்சின்னம் அமைத்துள்ளேன் மற்றும் எல்லா தருணத்திலும் என்னோடு நிழலாய் எப்போதும் என் மனைவி இருப்பாள் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband put a monument to his wife's grave


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->