பெற்ற தாயை கோவிலில் விட்டுச்சென்ற கொடூர மகன்.! சிம் இல்லாத செல்போன், வெற்று காகிதம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் ஹூலிகி கிராமத்தில் புகழ்பெற்ற ஹூலிகெம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் நடை அடைக்கும் வரை 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பரிதாபமாக அமர்ந்திருந்தார். 

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் மூதாட்டியிடம் விசாரித்த போது அவர் தனது மகருடன் கோவிலுக்கு வந்ததாகவும், அவருடைய மகன் தனது கையில் செல்போன் எண் எழுதிய காகிதம் ஒன்றையும், ஒரு செல்போனையும் கொடுத்துவிட்டு அழைப்பதாக கூறி சென்றதாக தெரிவித்துள்ளார். 

இதன் பின்னர் அருகில் இருந்தவர்கள் அந்த மூதாட்டி வைத்திருந்த காகிதத்தையும், செல்போனையும் வாங்கி பார்த்த போது அவருடைய மகன் செல்போன் எண் இல்லாத வெற்று காகிதத்தையும், சிம் கார்டு இல்லாத செல்போனையும் கொடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.

இது குறித்து முனிராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் மூதாட்டியின் மகன் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The cruel son who left his birth mother in the temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->