வெளிநாட்டுக்கு தப்பியோடிய 15 பொருளாதார குற்றவாளிகள்; நாட்டிற்கு ரூ.26,645 கோடி இழப்பு..!
The country lost Rs 26645 crore due to 15 economic criminals who fled abroad
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பித்துள்ளது. இதில், லோக்சபா காங்கிரஸ் எம்.பி.,முராரிலால் மீனா, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்துள்ளார்.
அதாவது, தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றும், தப்பியோடி பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018-இந்த கீழ் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 15 பேரில் 09 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிரான பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டனர். இந்த பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பெரிய தொழிலதிபர்கள் பெயர்கள் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களால் 2025 அக்டோபர் 31 வரை வங்கிகளுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு வட்டி உள்பட ரூ.31,437 கோடி என்றும், அசல் தொகை இழப்பு ரூ.26,645 கோடி என்றும் தெரிவித்துள்ளார். இந்த 15 பொருளாதார குற்றவாளிகளால் ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு ரூ.57,082 கோடி என்றும், இந்த குற்றவாளிகளிடம் இருந்து ரூ.19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பட்டியல் கீழ்வருமாறு:
01- விஜய் மல்லையா
02- நீரவ் மோடி
03- நிதின் ஜெ சந்தேசரா
04- சேத்தன் ஜெ சந்தேசரா
05- தீப்தி சி சந்தேசரா
06- சுதர்ஷன் வெங்கட்ராமன்
07- ராமானுஜம் சேஷரத்தினம்
08- புஷ்பேஷ் குமார் பெய்ட்
09- ஹிதேஷ்குமார் நரேந்திரபாய் படேல்
English Summary
The country lost Rs 26645 crore due to 15 economic criminals who fled abroad